For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல் விலை உயர்த்தப்பட்டால் அரிசி விலையும் உயரும்: வேலு

Google Oneindia Tamil News

சென்னை: நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டால் அரிசி விலையும் உயரும் என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நெல் கொள்முதலுக்குக்கான ஊக்கத் தொகை உயர்த்தப்படுமா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சிவபுண்ணியம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வேலு, மத்திய அரசு சாதாரண ரக நெல்லுக்கு ரூ. 950ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ. 980ம் அளித்து வருகிறது. மேலும், நெல்லுக்கு ரூ. 50 என்ற அளவில் மத்திய அரசு வழங்கியது. மத்திய அரசு அளிக்கும் தொகை போதவில்லை என்று கூறியபோது மாநில அரசு சன்ன ரக நெல்லுக்கு ரூ. 70ம், சாதாரண ரக நெல்லுக்கு ரூ. 50ம் வழங்கியது.

இதே அளவுதான் ஊக்கத் தொகையும் கிடைக்கும். ஏனென்றால் நெல் விலை உயர்ந்தால் அரசி விலையும் உயரும் என்றார்.

English summary
TN food minister E. V. Velu told that if paddy price increases then rice price will increase automatically. People are already suffering because of increasing prices of food. This announcement is a heavy blow on the already broken heart of the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X