பாளை சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு-மாஜிஸ்திரேட் விசாரணை
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி இறந்தது தொடர்பாக கைதிகள், சிறை காவலர்களிடம் நேற்று மாஜிஸ்திரேட் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
குமரி மாவட்டம் கல்குளம் அருகேயுள்ள வீரவிலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்ற ஆசி. ஆயுள்தண்டனை கைதியான அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை அவர் மீது போர்வையை போர்த்தி கைதிகள் சிலர் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை சிறை காவலர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுப்பிரமணியன் வழியிலேயே இறந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுப்பிரமணியன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்சிறையில் உள்ள கைதிகள் 500 பேர் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று காலை 11 மணிக்கு சிறைக்கு வந்த மாஜிஸ்திரேட் ராஜேந்திர கண்ணா சிறை காவலர்கள், கைதிகள் மற்றும் இறந்த கைதியின் உறவினர்களிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
அப்போது கைதிகள் டாக்டர் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் கைதிகளை சமாதானப்படுத்தினார்.
இதனால் கைதிகள் நேற்று மதியம் உணவை சாப்பிட்டனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் சுப்பிரமணியன் சாவு குறித்து உண்மை நிலவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications