பெண் கமாண்டோப் படை கலைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு-டிஜிபி
சென்னை: தமிழக பெண் கமாண்டோப் படை கலைக்கப்பட்டு விட்டதாக வெளியான செய்தி தவறு. வேண்டுமென்றே இந்த செய்தி பரப்பப்படுகிறது என்று டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பெண் போலீஸ் கமாண்டோ படை கலைக்கப்பட்டு விட்டதாக, வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புகிறார்கள். நான் அது போன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
110 பெண் போலீஸ் கமாண்டோக்களோடு அந்த படை தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. 2005-ம் ஆண்டுக்குபிறகு 2383 பெண் போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு விஷேச போலீஸ் படையில் பணியில் சேரும் பெண் போலீசார் அனைவருக்கும் கமாண்டோ பயிற்சியும் இனிமேல் கொடுக்க ஆணையிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
நாட்டிலேயே முதலாவது மகளிர் கமாண்டோ படை
தமிழக காவல் துறையில் மகளிர் காவலர்களுக்கென தனிப்பிரிவு 1979-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்போதைய நிலையில், தமிழ்நாட்டில் 10,130 பெண் காவலர்கள் அனைத்து காவல்துறைப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 196 மகளிர் காவல் நிலையங்கள் பெண் காவலர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக காவல்துறையிலேயே அதிக அளவில் பெண் காவலர்கள் பணிபுரிகின்றனர்.
காவல்துறை பணியில் மகளிருக்கு உள்ள ஆர்வத்தை அடுத்து ஆண்டு தோறும் காவல்துறையில் பல்வேறு நிலை ஆள்சேர்ப்பில் கணிசமான இடம் மகளிருக்கு ஒதுக்கப்படுகிறது.
உயர் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சில முக்கிய பணிகளில் பயன்படுத்துவதற்காக 1997-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் கமாண்டோ படையும், கமாண்டோ படை பயிற்சி பள்ளியும் தொடங்கப்பட்டன.
கமாண்டோ படையினருக்கு நவீன ஆயுதங்களைக் கையாளுவதற்கும், வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்தும் உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மறைந்து நின்று துப்பாக்கி சுடுதல், வனப்பகுதியில் தங்கியிருத்தல், ஆயுதங்களைக் கையாளுதல், நாசவேலைகளுக்கு எதிரான செயல்பாடுகள் ஆகிய முக்கிய பணிகளைக் கையாளும் திறமைகளை வளர்த்துக்கொள்ள இப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதர துறைகளான சிறைத்துறையினர், மத்திய ஆயுதத் துறையினர், இதர மாநிலங்களின் காவல்துறையினர் ஆகியோருக்கும் இப் பள்ளி சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.
தொடக்கம் முதலே கமாண்டோ படையில் பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆண் காவலர்களே சேர்க்கப்பட்டனர். 2001-ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதையடுத்து, காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
இதன் விளைவாக அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிர் காவல் பிரிவு கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து கமாண்டோ படையிலும் பெண்களை சேர்க்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து 2003 ஜனவரி முதல் மகளிர் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மருதம் வளாகத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
2003 ஜூன் 2-ம் தேதி நாட்டிலேயே முதலாவது மகளிர் கமாண்டோ படை 151 பேருடன் தொடங்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நிகழ்ச்சியில் பங்கேற்று முதலாவது மகளிர் கமாண்டோ படை தொடங்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமிழகத்தில் மகளிர் கமாண்டோ பிரிவு தொடங்கப்பட்டதை அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தங்களது மாநில காவல்படையில் மகளிர் கமாண்டோ படையை தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications