பாளையங்கோட்டையில் ஒரே நாளில் 8 அரசு பஸ்கள் ஜப்தி: கோர்ட் அதிரடி
நெல்லை: விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் ஒரே நாளில் நெல்லையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 8 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.
சிவகாசியில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர் வேனில் சென்றனர். செங்குளம் ரயில் நிலையம் அருகே வேன் மீது நாகர்கோவிலில் இருந்து நெல்லை வந்த அரசுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் சிவகாசியைச் சேர்ந்த ராமசந்திரன், கணேசன் மனைவி மாரித்தாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களது குடும்பத்தினர் வக்கீல் அமலன் மூலம் இழப்பீடு கேட்டு 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீடு வழங்காமல் அரசு போக்குவரத்துக் கழகம் காலம் தாழ்த்தி வந்தது. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி பிரபுதாஸ், அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 25 பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்படி பாளை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications