திமுக ஆட்சிக்கு 'மதிப்பெண்' போட மறுத்த ராமதாஸ்!!

தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தில் நகர்ப்புற வறுமை குறைந்த அளவுக்கு கிராமப்புற வறுமை குறையவில்லை. சிறு விவசாயிகளுக்கு அரசு ஆண்டுக்கு ஒருமுறை ரூ. 25,000 வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயப் பணிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருப்பதாக துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.
தற்போது 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதை 16 வயதாக குறைக்கலாம் என்று தேர்தல் ஆணையர் குரேஷி அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இளைஞர்கள் அரசியல், பொது வாழ்க்கை, பொதுச் சேவையில் பங்கேற்க வேண்டும் என்பது அவசியம். ஆனால் வாக்களிக்கும் வயதை 16 வயதாக குறைப்பது சரியல்ல. உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதிர்ச்சியிருக்காது. எனவே ஓட்டுரிமை 18 வயது என்ற அளவிலேயே இருக்க வேண்டும்.
தேர்தலுக்கு பிறகு நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டும் போராட்டம் நடைபெறும். போராட்டம் மிகக் கடுமையானதாக இருக்கும். முதலில் மகளிரணி, பின் இளைஞரணியினர் இந்த போராட்டத்தை நடத்துவர்.
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டுமென்பதை விட, யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்கு பாமக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த அடிப்படையில் பாமகவின் தேர்தல் கூட்டணி அமையும் என்றார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள்,பாமக தரப்பிலிருந்து கூட்டணி அமைக்க சமிக்ஞை வந்துள்ளதாகவும் நாங்களும் சமிக்ஞை அனுப்பியுள்ளோம் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே என்று கேட்டதற்து, திமுக தரப்பிலிருந்து எங்களுக்கு சமிக்ஞை எதுவும் வரவில்லை. பொங்கலுக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கடும் என்றார்.
திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்கு என்ன மதிப்பெண் போடுவீர்கள் என்று கேட்டதற்கு, மக்களே மதிப்பெண் போடத்தான் தேர்தலே வரவுள்ளதே என்றார்.
கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் என்று கேட்டதற்து, மொத்தம் 50 தொகுதிகள் கேட்போம்.தென் மாவட்டங்களிலும் சீட் கேட்போம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சீட் இருக்குமாறு கேட்டு பெறுவோம் என்றார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு பூஜ்யம் மதிப்பெண் போட்ட ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பூஜ்யம் இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் இம்முறை திமுக ஆட்சிக்கு மதிப்பெண் போடுவதை அவர் தவிர்த்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications