சுவிஸில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 10 பேர் கைது!
பெர்ன்: சுவிட்ஸர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகள் மற்றும் குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் என்கிற குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சுவிஸ் முழுவதும் 20 இடங்களில் தேடுதல் வேட்டைகள் நடத்தி இவர்களை கைது செய்ததாக அந்நாட்டு குற்றவியல் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கைதுகளுக்கான புலனாய்வு நடவடிக்கைகள் 18 மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டிருப்பவர்கள், சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழும் மற்ற தமிழர்களை விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி அளிக்கும்படி மிரட்டினர் என்று நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், அங்குள்ள தமது நாட்டைச் சேர்ந்த தமிழர்களை பெருந்தொகையான பணத்தை கடனாகப் பெற்று தம்மிடம் கொடுக்கும்படி மிரட்டியும், அச்சுறுத்தியும் பணிய வைத்தனர் என்று அரச தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பல ஆண்டுகள் இடம் பெற்றன என்றும், அது அவர்களுக்கு பல மில்லியன் டாலர்களை ஈட்டிக் கொடுத்தது என்றும் அரச வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். சுவிட்ஸர்லாந்தில் சுமார் 40,000 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர்களே.
இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து சாட்சியம் அளிக்கும் வகையில் ஒரு சிறப்பு தொலைபேசி வசதியையும் சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications