திண்டுக்கல் அருகே மணல் கடத்திய திமுக பிரமுகர் லாரிகளை பிடித்த பொதுமக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான லாரியில் மணல் கடத்தியபோது அதை பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கோவிலூர் அருகே உள்ளது ரெட்டியபட்டி. இங்கு வசிப்பவர் திமுக பிரமுகர் வி. சி. ராஜேந்திரன்.
கோவிலூர் அருகேயுள்ள ஆர்.கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிய பட்டி கிராமம் அருகில் மணலூர் காட்டில் திமுக பிரமுகர் வி.சி.ராஜேந்திரன் லாரி லாரியாக மணலை அள்ளி வெளியூரில் வியாபாரம் செய்து வருகிறார்.
இது குறித்து கிராம மக்கள் பல முறை மாவட்ட கலெக்டரிம் புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான இரண்டு லாரிகளில் மணல் கடத்திச் செல்லும் போது அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர்.
இதனால் மணல் கடத்தி வந்த லாரிகளை அங்கேயே விட்டுவிட்டு லாரி டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதே போன்று அருகில் உள்ள மற்றொரு பகுதியில் மணல் கடத்திச் சென்று கொண்டிருந்த லாரியையும் மக்கள் விரட்டிச் சென்றனர். அவர்களும் லாரியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.
இதற்கிடையே லாரி பிடிபட்டது பற்றி கேள்விபட்ட ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று கிராம மக்களை மிரட்டியதாக கூறப்படுகின்றது.
மணல் கொள்ளையில் ஈடுபட்ட வி.சி.ராஜேந்திரன் மீது 30 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கொலை வழக்குகளும் அடங்கும். சமீபத்தில் கூட குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications