மைனருடன் உறவு : இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனி மீது கற்பழிப்பு வழக்கு

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி (74) மீது ஏற்கனவே வரி ஏய்ப்பு, ஊழல் புகார்கள் உள்ளன. மேலும் இரவு நேர விருந்து வைத்து இளம் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அவர் மொராக்கோவைச் சேர்ந்த 17 வயது கரிமா எல் மக்ரக் உடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அன்மையில் அந்த பெண் ஒரு திருட்டு வழக்கில் கைதானார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் இந்த உண்மை தெரியவந்தது.
இது குறித்து அந்த பெண் கூறியதாவது, பிரதமர் பெர்லஸ்கோனி ஏற்பாடு செய்திருந்த காதலர்கள் தின விருந்தில் நான் கலந்து கொண்டேன். அந்த விருந்திற்கு வந்ததற்காக அவர் எனக்கு பணம் கொடுத்தார். கடந்த ஆண்டு மிலனில் உள்ள அவரது வில்லாவில் நடந்த விருந்துக்கு என்னை அழைத்தபோது அவருக்கு நான் மைனர் என்பதே தெரியாது. ஏனென்றால் நான் அனைவரிடமும் எனக்கு 24 வயது என்று தான் சொல்வது வழக்கம் என்றார்.
மிலன் வழக்கறிஞர்கள் பெர்லஸ்கோனி மொராக்கோவைச் சேர்ந்த அந்த பெண்ணுடன் உறவு வைத்துக கொண்டு பணம் கொடுத்தாரா?, அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த விஷயத்தை மூடி மறைக்க முயன்றாரா? அந்த பெண்ணை விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாரா ? என்று விசாரித்து வருகின்றனர்.
இத்தாலியில் மைனர் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டவிரோதமான செயலாகும். இதையடுத்து அவர் மீது விபச்சார வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்தரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறி்த்து பெர்லஸ்கோனியிடம் கேட்டதற்கு, இது விசித்திரமான, நம்பமுடியாத குற்றச்சாட்டு என்று கூறினார். மேலும், தனது விருந்துகளில் எந்த சட்டவிரோதச் செயல்களும் நடப்பதில்லை என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications