ஓட்டு போடும் வயதை 16 ஆக குறைக்கும் திட்டமில்லை: தேர்தல் கமிஷன்
டெல்லி: தற்போது தேர்தலில் ஓட்டு போடும் வயது 18 ஆக உள்ளது. இதை 16 ஆக குறைக்க வேண்டும் என்று புவனேஸ்வரில் சமீபத்தில் நடந்த மாணவர்கள் மாநாட்டில் தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷியிடம் வற்புறுத்தப்பட்டது. இதற்கு பதிலளித்த குரோஷி இது பற்றி பரிசீலிப்பதாகக் கூறினார்.
இதையடுத்து ஓட்டுப்போடும் வயதை 16 ஆக குறைக்க மத்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால், இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓட்டு போடும் வயதை 16 ஆக குறைக்கும்படி தேர்தல் கமிஷனோ அல்லது தலைமை தேர்தல் கமிஷனரோ மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. அதே நேரத்தில் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தீவிர முயற்சிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications