கறுப்பு பண கட்சிகள்-தேர்தல் கமிஷனுக்கு பாஜக கோரிக்கை
டெல்லி: கறுப்பு பணத்தை புழக்கத்தில் விடும் அரசியல் கட்சிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல கட்சிகள் கறுப்பு பணத்தை புழக்கத்தில் விடவும், வரி ஏய்ப்பு செய்யவுமே அரசியல் போர்வையில் செயல்பட்டு வருவதாக தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஓய்.குரேஷி கூறியுள்ளார். மேலும் இது போன்ற கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்பிரதாப் ரூடி கூறுகையில், கறுப்பு பணத்தை புழக்கத்தில் விடுவதற்காக போலியாக சில அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறியிருப்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாகும்.
இந்த விவகாரத்தில் போலியாக வலம் வரும் அரசியல் கட்சிகள் எவை எவை, அவற்றின் செயல்பாட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் ஆகியவை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மேலும் இது போன்ற மோசடி அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications