பிப்.3ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்-கூட்டணி குறித்து முடிவு

விடிந்தால் கல்யாணம் என்பது போல எப்போது வேண்டுமானாலும் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலை தமிழகத்தில் உள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த தயாராகி விட்டது. அரசியல் கட்சிகளும் அதற்கேற்ற வகையில் தயாராகி வருகின்றன.
முக்கிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்யும் கடைசி நேர வேலைகளில் மும்முரமாக உள்ளன.
திமுக கூட்டணியில் பாமக இணையலாம் என்று கூறப்படும் நிலையில் , திமுக தனது பொதுக்குழுவைக் கூட்டியுள்ளது. இக் கூட்டத்தில் பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் 3.2.2011 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கூட்டணி குறித்தும், திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை விட்டுத் தருவது என்பது குறித்து இறுதி செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை திமுக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications