நெல்லையின் பிரபல அல்வாக் கடையில் ஐடி ரெய்டு-கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்

அல்வாவுக்குப் பெயர் போனது நெல்லை. அதிலும் நெல்லை சந்திப்புப் பகுதியில் நூற்றுக்கணக்கான அல்வாக் கடைகள் உள்ளன. அதில் பிரபலமான ஒன்று சாந்தி ஸ்வீட்ஸ் என்கிற கடை. பார்க்க மிகச் சிறியதாகஇருந்தாலும் மிகவும் பிசியாக இருக்கக் கூடிய கடை இது.
இந்த கடையில் நேற்று இரவு திடீரென வருமான வரித்துறையினர் புகுந்து அதிரடி ரெய்டில் இறங்கினர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.
விற்பனை படு சூடாக இருந்த சமயம் பார்த்து, மதுரை வருமான வரித்துறை துணை இயக்குனர் மருது பாண்டி தலைமையிலான அதிகாரிகள் குழு இரவு 7 மணிக்கு உள்ளே புகுந்து சோதனையை தொடங்கினர். விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட அதிகாரிகள், கடை ஊழியர்களை வெளியேறக் கூடாது என்று தடை போட்டு விட்டு சோதனையில் குதித்தனர்.
கடையின் உரிமையாளர், ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. இதேபோல கடை உரிமையாளரின் வீடு, அல்வா குடோன் உள்ளிட்ட இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த ரெய்டின்போது, கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருமானவரித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் நடந்த இந்த அதிரடி ரெய்டு நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications