சென்னையில் காணும் பொங்கல்-கடற்கரையில் மக்கள் வெள்ளம்
சென்னை : பொங்கல் திருநாளின் கடைசி நாள் நிகழ்ச்சியான காணும் பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலாத் தலங்கள், நீர் நிலைகள், விலங்கியல் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் குவிந்தனர். சென்னை கடற்கரையில் மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பொங்கல் திருநாள், போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் என்றுதான் வழக்கத்தில் உள்ளது. இருப்பினும் காணும் பொங்கல் என்று கடைசியாக ஒரு நாள் கொண்டாடுவது இப்போது வழக்கமாகியுள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில்தான் காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினத்தில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வதும், வெளியிடங்களுக்குச் சுற்றுலா செல்வதும் வழக்கமாக உள்ளது.
தென் மாவட்டங்களில் இந்த தினத்தை கனுப் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் சகோதரிகளுக்கு, சகோதரர்கள் சீர் கொடுப்பது சம்பிரதாயம். திருமணமான, திருமணமாகாத சகோதரிகளுக்கு உடன் பிறந்தவர்கள் தங்களால் இயன்ற பொருட்களை வாங்கித் தந்து அவர்களின் வளமான வாழ்க்கைக்கு ஆசிர்வாதம் செய்வது வழக்கம்.
இன்று காணும் பொங்கல். இதையொட்டி தமிழகம் முழுவதும் உற்சாகப் பெருக்கில் மூழ்கியது.
சென்னையில் மெரீனா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. கட்டுச் சோறு கட்டிக் கொண்டு குடும்பம் குடும்பமாக கடற்கரையில் மக்கள் குவிந்தனர் மக்கள். உற்றார், உறவினர், நண்பர் புடை சூழ கடற்கரைக்கு வந்ததால் கடற்கரை முழுவதும் மக்கள் மயமாகக் காணப்பட்டது.
காணும் பொங்கலையொட்டி லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதால் யாரும் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குதிரைப் படை போலீஸார் ரோந்து சுற்றி வந்தனர். போதிய அளவிலான போலீஸாரும், அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காமராஜர் சாலை உள்ளிட்ட அக்கம் பக்கத்து சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
இதேபோல பெசன்ட் நகரில் உள்ள கடற்கரை, விஜிபி தீம் பார்க், முட்டுக்காடு, மகாபலிபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டமாக இருந்தது. அதேபோல வேடந்தாங்கலுக்கும் மக்கள் படையெடுத்தனர். வண்டலூரில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கும் மக்கள் கூட்டம் மொய்த்தது.
திருச்சி அருகே உள்ள முக்கொம்பிலும் மக்கள் குவி்ந்தனர். அதேபோல கன்னியாகுமரியிலும் மக்கள் குவிந்தனர். தமிழகத்தின் அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications