Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானா விவாகரம்: டிஆர்எஸ், பாஜக சாலைமறியல் - நூற்றுக்கணக்கானோர் கைது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவை தனிமாநிலமாக்கக் கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இப்போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சி, பாஜக உள்ளிட்ட தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெலுங்கானா பகுதியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் 9 மாவட்டங்களில் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தால் பல கிமீ தூரம் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கூட்டுப் போராட்டக் குழுத் தலைவர் கோதண்டராமன், பாஜக தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா, டிஆர்எஸ் தலைவர்கள், தொண்டர்கள் ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முடக்கியபோது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

போராட்டக்காரர்கள் ஜெய் தெலுங்கானா என்று கோஷம் எழுப்பிக் கொண்டு கட்சிக் கொடிகளுடன் சாலைகளை மறித்தனர்.

இந்த அரசு போலீசைக் கொண்டு எங்களுக்கு போராடும் உரிமையை மறுக்கிறது என்று கோதண்டராமன் தெரிவித்தார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டுபோய் வேனில் ஏற்றினர்.

ஹைதராபாத்தின் முக்கிய இடமான ஆர்டிசி குறுக்குச் சாலைகளில் டிஆர்எஸ் தலைவர் என். நரசிம்ம ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். அவர்களை போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.

டிஆர்எஸ் எம்எல்ஏ ஹரிஷ் ராவ் மேதக் மாவட்டத்தில் உள்ள சித்திபெட்டில் போராட்டத்தில் குதி்த்தார். ஹைதராபாத்-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்துகள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் நெடுந்தூரத்திற்கு நின்றன. பொறுமையை இழந்த மக்கள் சாலையிலேயே சமைத்து சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.

கரிம்நகர், வாரங்கல், ஆதிலாப்த், நிஜாமாபாத், ரங்கா ரெட்டி, நல்கொண்டா, மஹபூப்நகர் மற்றும் இதர மாவட்டங்களில் தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு மாணவர்கள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இன்று மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் 5வது பரிந்துரையை ஏற்று தெலுங்கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் உள்ளிட்ட தெலுங்கானா ஆதரவு கட்சிகள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+