அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி-22ம் தேதி திறப்பு
சென்னை: சென்னை அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒரு வழியாக அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து இந்தப் பூங்காவை வரும் 22ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கவுள்ளார்.
சென்னை அடையாறில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் பூங்கா தமிழக அரசு சுற்றுச்சூழல் பூங்காவை அமைத்துள்ளது.
58 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு கடற்கரை மணடல மேம்பாட்டுக் குழுமம் அமைத்தது.
சென்னையில் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை உணர்ந்து அடையாறு ஓடை மற்றும் முகத்துவாரத்தை மறுசீரமைக்கும் வகையில் ரூ.100 கோடியில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது.
இதற்காக கடற்கரையை ஒட்டியுள்ள இடங்கள் சீர்செய்யப்பட்டு மரம், செடிகள் நடப்பட்டன. சிறு பாலங்கள், நடைபாதைகள், மூலிகை செடிகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. துணை முதல்வர் ஸ்டாலினின் தான் இந்தப் பூங்காவை அமைக்க முதல் முயற்சி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டு தொடங்கிய இந்தப் பணி சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து இந்தப் பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 3ம் திறந்து வைப்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந் நிலையில் இந்தப் பூங்காவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் நடந்த நிலையில் முதல்வர் கருணாநிதியுடன் விழாவில் பிரதமர் கலந்து கொள்ளாமல் தவிர்க்கவே பூங்காவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி தராமல் இழுத்ததடித்தாகவும் பேச்சு எழுந்தது.
அதை உறுதி செய்வது போல இன்னொரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த பிரதமரை முதல்வர் கருணாநிதி வரவேற்கச் செல்லாமல் தவிர்த்தார்.
இதையடுத்து பல மத்திய அமைச்சர்களும் முதல்வர் கருணாநிதியை அடுத்தடுத்து சந்தித்தனர். மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த 3 நபர் கொண்ட குழு அடையார் பூங்காவை ஆய்வு செய்தது. கடந்த 11ம் தேதி நடந்த ஆய்வுக்குப் பின் பூங்காவை திறக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பூங்காவை முதல்வர் கருணாநிதி வரும் 22ம் தேதி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications