அண்ணி மீதான வெறுப்பில் அண்ணனை கொலை செய்த தம்பி!
சிதம்பரம்: அண்ணி மீதான வெறுப்பில் அண்ணனைக் கொலை செய்த தம்பி தலைமறைவாகிவிட்டார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆடூர் அகரம் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரையின் மகன்கள் விஜயானந்தன் (28), சங்கர் (25). சென்னையில் ஜே.சி.பி.ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த விஜயானந்தனுக்கும், தீபாவுக்கும் (28) கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.
4 நாட்களுக்கு முன்பு தலைபொங்கலுக்காக விஜயானந்தன் தனது மனைவியுடன் சென்னையிலிருந்து தனது மாமனார் வீடு உள்ள குச்சிபாளையத்துக்கு வந்தார்.
இந் நிலையில் நேற்றிரவு விஜயானந்தனின் தம்பி சங்கர் ஆவேசத்துடன் குச்சிபாளையம் வந்தார். தூங்கிக் கொண்டிருந்த விஜயானந்தனை கத்தியால் சரமாரியாகக் குத்தினார். ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிய, சங்கர் தப்பியோடி விட்டார்.
உயிருக்கு போராடிய விஜயானந்தன் சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விஜயானந்தனுக்கு தீபாவை பெண் பார்த்த போது சங்கருக்கு தீபாவைப் பிடிக்கவில்லை என்றும், இதனால் அவரை திருமணம் செய்ய வேண்டாம் என்று கூறியதாகவும், அதை மீறி தீபாவை விஜயானந்தன் திருமணம் செய்ததால், தலை பொங்கல் தினத்தில் விஜயானந்தனை சங்கர் கொன்றதாகவும் தெரியவந்துள்ளது.
தலைமறைவாகிவிட்ட சங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications