ரங்கசாமியுடன் காங். தலைவர்கள் பேச்சு தோல்வி: இன்று ராஜினாமா?
புதுச்சேரி: புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதையடுத்து அவருடன் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
ரங்கசாமி புதுவை மாநில முதல்வராக இருக்கையில் அவர் மீது அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் ஒன்றாகச் சேர்ந்து டெல்லி சென்று கட்சி மேலிடத்தில் புகார் செய்தனர். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கட்சி மேலிடமும் அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கியது. இதையடுத்து அமைச்சர் வைத்திலிங்கம் முதல்வரானார்.
பின்னர் ரங்கசாமி ஆதரவாளர்கள் சிலருக்கு பதவி பறிபோனது. மேலும், அவர்கள் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள் ரங்கசாமியை தனிக் கட்சி துவங்குமாறு வலியுறுத்தினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று ரங்கசாமி புதுக் கட்சி துவங்க முடிவெடுத்துள்ளார். அதற்காக தனது எம்.எல். ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்.
இந்நிலையில் ரங்கசாமியை சந்தித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ரங்கசாமி தனது முடிவில் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அவர் இன்று பிற்பகலில் சபாநாயகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications