பெட்ரோல் விலை உயர்வு-பார்வர்ட் பிளாக் கடும் கண்டனம்
மதுரை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 2. 54 உயர்ந்துள்ளது.
இதற்கு காரணமாக இருக்கின்ற மத்திய அரசின் நடவடிக்கையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.
பன்னாட்டு சந்தையில் பெட்ரோல் விலை உயரும் போது அதை காரணம் காட்டும் மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு விலை குறைந்த போது பெட்ரோல் விலையை குறைக்க முன் வரவில்லையே.
விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனங்களிடம் இருந்து திரும்பப் பெறவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பார்வர்ட் பிளாக் இடது சாரி கட்சிகளுடன் இணைந்து பேராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications