தலிபான் தலைவர் முல்லா ஒமருக்கு மாரடைப்பு-கராச்சியில் சிகிச்சை பெற உதவிய ஐஎஸ்ஐ

முல்லா ஒமர் உலகஅளவில் மிக பயங்கரமான தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வருபவர். ஆப்கானிஸ்தானில் பிறந்தவரான இவர் தலிபான் அமைப்பின் தலைவர் ஆவார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆண்டு வந்தபோது அதன் தலைவராக இருந்தவர். இவரை அமெரிக்கா வலை வீசி தேடி வருகிறது. ஆனால் இவர் யாரிடமும் சிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், முல்லா ஒமருக்கு கடந்த 7ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் கராச்சி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிகிச்சைக்கு ஐஎஸ்ஐதான் உதவி செய்ததாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.
எக்ளிப்ஸ் என்ற ஒரு தனியார் உளவு நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. முன்னாள் சிஐஏ ஏஜென்ட் ஒருவர் நடத்தும் உளவு அமைப்பாகும் இது.
ஆனால் இந்த செய்தியை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தூதர் ஹூசேன் ஹக்கானி வாஷிங்டனில் கூறுகையில், இது அடிப்படை ஆதாதரமற்ற செய்தி என்றார்.
ஒற்றைக் கண்ணுடன் உலவி வரும் முல்லா ஒமர், பாகிஸ்தான் பகுதியில்தான் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா உறுதியாக நம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications