டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் ரூபாய் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து கடந்த 2009ம் ஆண்டு நான் சொன்னது உண்மையாகியுள்ளது. அப்போது இதை தேர்தல் கால தந்திரப் பேச்சு என்று கூறினார் பிரதமர். ஆனால் நான் சொன்னது சரி என்பதை உச்சநீதிமன்றமே இன்று நிரூபணம் செய்துள்ளது என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அத்வானி.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் ரூபாய் கருப்புப் பணத்தை இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ளது குறித்து 2009ம் ஆண்டிலேயே நான் தெரிவித்தேன். ஆனால் இதை தேர்தல் கால தந்திரப் பேச்சு என்று கூறினார் பிரதமர். நான் கூறிய புகாரை முழுமையாக நிராகரித்தார்.
ஆனால் இன்று உச்சநீதிமன்றம் நான் சொன்னதைத்தான் கூறியுள்ளது. அரசைக் கடுமையாக கண்டித்துள்ளது. அதை விட முக்கியமாக,பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கருப்புப் பணப் பிரச்சினை குறித்து விவாதித்துள்ளனர். நான் சொன்னது சரி என்பதை உச்சநீதிமன்றம், முன்பு மறுத்துப் பேசிய பிரதமருமே இன்று உண்மை என்பதை தெளிவாக்கியுள்ளனர்.
இந்த அரசு மீது சரமாரியான ஊழல் புகார்கள் குவிந்து வருகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் என்று வரலாறு காணாத அளவுக்கு ஊழல் புகார்கள் இந்த ஆட்சியின் கீழ் மலிந்து காணப்படுகின்றன. இவற்றுக்கு பிரதமர் பதிலளித்தாக வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். அதிலிருந்து அவர் தப்ப முயலக் கூடாது என்றார் அத்வானி.
Mounting a fresh attack on Prime Minister Manmohan Singh, senior BJP leader L K Advani said the Supreme Court rap on government on the issue of blackmoney stashed in foreign banks ran contrary to PM's earlier assertions and vindicated his stand. "When I had raised the issue in 2009, the Prime Minister had dubbed my statements as an election stunt and irresponsible. But after the Supreme Court observations that Indian blackmoney stashed in foreign banks is a plunder of country's resources, the rejigged Cabinet in its first meeting today was forced to discuss the issue," Advani said. He said from allocation of 2G spectrum to Commonwealth Games and Adarsh housing society scams, Government was facing a series of corruption charges.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.