மனைவிக்கு டிரான்ஸ்பர் கிடைக்காததால் வழக்கறிஞர் தற்கொலை: அதிகாரிகள் மீது புகார்
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மனைவிக்கு இடமாற்றம் கிடைக்காததால் வழக்கறிஞர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பீல்கானா பகுதியைச் சேர்ந்தவர் வினய் குமார் சிங் (42). வழக்கறிஞர். அவரது மனைவி உமா. பரூகாபாத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றின் ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மக்ள் இருக்கிறார்.
உமாவை கான்பூருக்கு மாற்றக் கோரி மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு வினய் பல முறை கோரிக்கை விடுத்துள்ளார். அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் மிஷ்ரா மற்றும் பரூகாபாத் எம்.எல்.ஏ.வுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் எந்த வித பலனும் இல்லை.
இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது மனைவி வீட்டில் இல்லை, மகள் அடுத்த அறையில் படித்துக் கொண்டிருந்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications