பெரும் வன்முறையாக மாறிய கர்நாடக பந்த்... 31 பேருந்துகள் எரிப்பு!
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்து வருகின்றனர். இதுவரை 31 பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. நகரில் உள்ள அனைத்து பேருந்து பணிமனைகளையும் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
பெங்களூர் ஜெயநகர், ஆர்கே புரம், எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களில் பேருந்துகள் அடித்து நொறுக்கி எரிக்கப்பட்டன. தும்கூரில் துருவீகரேயிலும் அரசு பேருந்துகள் எரிக்கப்பட்டன.
பெங்களூருக்கு வெளியே ஹாஸன், தேவநகரே மாவட்டத்தின் பல பகுதிகளில் பேருந்துகள் தொடர்ந்து எரிக்கப்பட்டு வருகின்றன.
பெங்களூர் பழைய மெட்ராஸ் சாலை கலவரக்காரர்களால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மூடப்பட்டது. அங்குள்ள டின் பேக்டரிக்கு பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் நிறுத்தப்பட்டனர். அங்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜின் கொடும்பாவிகளைக் கொளுத்தினர். ஆனால் போலீசார் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வன்முறையாளர்கள் ஒரு ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி கலாட்டா செய்த போது மட்டும் போலீசார் தலையிட்டு அனுப்பி வைத்தனர்.
ஷிமோகா, பெல்காம் உள்ளிட்ட கர்நாடகத்தின் உள்ளார்ந்த பகுதிகளிலும் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரகிறது. குறிப்பாக உத்தர் கர்நாடகப் பகுதிகளில் பாஜக ஆதரவாளர்கள் என்ற பெயரில் வன்முறையாளர்கள் பொது சொத்துக்களை சூறையாடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications