கருப்புப் பணம் குறித்த விவரம் அறிய 2012 வரை இந்தியா காத்திருக்க வேண்டும்
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் பிரமாண்டமான கருப்புப் பணம் குறித்த விவரங்களை அறிய வேண்டுமானால் இந்தியா 2012ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
சுவிட்சர்லாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இதுதொடர்பான தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2012ம் ஆண்டில்தான் அமலுக்கு வரவுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு இந்தியாவில் பல்வேறு துறைகள் ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்திலும் இதே நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றம் அனுமதி தந்தாக வேண்டும். இதெல்லாம் முடிய 2012ம் ஆண்டு ஆகி விடும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால்தான் இந்த ஒப்பந்தத்தின் கீழ் சுவிஸ் வங்கிகளில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த தகவல்களை நம்மால் பெற முடியுமாம்.
இத்தகவலை சுவிட்சர்லாந்தின் நிதித்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
