கர்நாடகத்தில் பாஜக நடத்திய பந்த்தால் ரூ.2000 கோடி இழப்பு!

கர்நாடகத்தில் நேற்று பாஜகவினர் நடத்திய பெரும் வன்முறை போர்க்களமாக மாறியது. அரசுப் பேருந்துகள் உள்ளிட்டவை தீவைத்து எரிக்கப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்கள் கூட ஓடவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.
இந்த ஒரு நாள் கூத்தால்,மக்களுக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்புடன், ரூ. 2000 கோடி அளவுக்கு இழப்பையும் சந்தித்துள்ளது கர்நாடகா.
பெங்களூரில் தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆங்காங்கு பஸ் எரிப்பு, கல்வீச்சு உள்ளிட்டவையும் நடந்தேறின.
மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டதாக 501 பேரை போலீஸார் கைது செய்தனர். பெங்களூரில் பனசங்கரி பகுதியில் 30 பேர், கே.ஆர்புரத்தில் 32 பேர் கைதாகினர்.
வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு வரை போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பந்த் போராட்டத்திற்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்ற போதிலும், கடைகள் முன்னெச்சரிக்கையாக அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரெஸ்டாரென்டுகள், போக்குவரத்து நிறுவனங்கள், டாக்சி, ஆட்டோ, சில்லறைக் கடைகளில் விற்பனை கடும் பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை.
இந்தப் போராட்டம் குறித்து கர்நாடக வர்த்தக சபை தலைவர் சீனிவாசமூர்த்தி கூறுகையில், இந்த பந்த்தால் பெரும் பாதிப்பை சந்தித்தவர்கள் அழுகும் பொருட்களை விற்பவர்கள்தான்.
அனைத்து காய்கறி சந்தைகளிலும் வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது. இந்த பந்த்தால் மொத்தமாக ரூ. 2000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக கருதுகிறோம் என்றார்.
யஷ்வந்த்பூரில் உள்ள மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. இருப்பினும் சிலர் பாதிக் கதவுகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்தனர். ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை.
மக்கள் யாரும் வராததால் 16,000 மூடை வெங்காயம், 12,000 மூடை உருளைகிழங்கு ஆகியவை பாதி விலைக்கு விற்கும் அவலத்திற்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர்.
பஸ்கள், ஆட்டோக்கள் என எதுவுமே இல்லாததால் மக்கள் யாரும் வராத நிலை ஏற்பட்டு, தங்களது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications