கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கையுடன் உறவை முறிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த அந்நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும்போது அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இத்தகைய நடவடிக்கையைத்தான் இந்தியக் கடற்படை எடுக்கிறது.
ஆனால் தமிழக மீனவர்களை இவர்கள் நமது எதிரிகள் என்ற கோணத்தில் சிங்களக் கடற்படையினர் பார்ப்பதால்தான் இதுபோன்ற கொலைகள் நடத்தப்படுகின்றன.
கடந்தவாரம் ஒரு தமிழக மீனவரை சிங்களப்படையினர் சுட்டுக்கொன்றனர். இதற்காக இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
ஆனால், இலங்கை அரசோ தமிழக மீனவரை எங்களது கடற்படை சுட்டுக் கொல்லவில்லை என்று கூறிவிட்டது. இலங்கை அரசின் இந்த வாதம் பொய்யானது என்பதை நிரூபிக்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் இதுபோன்ற தாக்குதல்கள் தொடருகின்றன. அதுவும் இந்தியக் கடலோரக் காவல்படையின் தென்மண்டலத் தளபதி எஸ்.பி. மிஸ்ரா, இனிமேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்த ஒருசில மணி நேரங்களிலேயே இந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது.
இதற்கு மேலும் இந்த விஷயத்தில் பொறுமை காக்கமுடியாது. சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், கொன்று குவிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே தீர்வு கச்சத் தீவை மீட்பதும், இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதும்தான்.
இலங்கையிலுள்ள இந்தியத் தூதரைத் திரும்பப் பெறுவதுடன், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த இதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications