வீரபாண்டி ஆறுமுகம் காரை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்
சேலம்: சேலத்தில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் அந்த வழியாக வந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின்காரை சிறைப் பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களுக்கும், அமைச்சருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் மூண்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில், அங்குள்ள ஒரு கல்லூரியின் விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது காரில் வந்தார்.
இதைப் பார்த்த மாணவர்கள் திரண்டு சென்று காரை வழிமறித்து சிறை பிடிப்பது போல நிறுத்தி சூழ்ந்து கொண்டனர். இதனால் கார் போக முடியவில்லை. இதைப் பார்த்த அமைச்சர் டென்ஷனானார். மாணவர்களிடம் வழி விடுமாறு கண்டிப்பு கலந்த குரலில் கூறினார். ஆனால் இதைக் கேட்ட மாணவர்கள் காரைப் போக விட மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினர்.
இதையடுத்து அமைச்சருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸார் விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
சட்ட மாணவர்கள் போராட்டம்
இதற்கிடையே, தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர்தொடர்ந்து சுட்டுக் கொன்று வருவதைக் கண்டித்து சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications