புல்மேட்டில் தமிழக பதிவு எண்ணுடன் அனாதையாக கிடந்த பைக்: போலீசார் விசாரணை
பத்தனம்திட்டா: சபரி்மலை புல்மேட்டில் விபத்து நடந்த இடத்தில் அனாதையாக கிடந்த தமிழக பதிவெண் கொண்ட பைக்கின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சபரி்மலையில் மகர ஜோதியை தரிசித்து விட்டு திரும்பும் போது புல்மேட்டில் நடந்த விபத்தில் சிக்கி 107 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து கேரள குற்றப்பிரிவு எஸ்பி சுரேந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவர்கள் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனிப்பிரிவு டிஎஸ்பி விஜயன் உள்ளிட்ட போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்தில் தமிழக பதிவெண் கொண்ட பைக் ஒன்று அனாதையாகக் கிடந்தது. அதன் உரிமையாளர் யார் என்பதை போலீசாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பைக் உரிமையாளரை கண்டுபிடிக்க எஸ்ஐ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. புல்மேடு விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களிடமும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளனர். விபத்தில் பலியான பக்தர்களிடம் இருந்து நகை, பணம், செல்போன் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வண்டி பெரியார் பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து பணம், ஏராளமான செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications