ரூ. 17,500 கோடியில் 6 மாநிலங்களில் 7 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்

இதுகுறித்து மத்திய தொழில் வர்த்தக அமைசத்சகத்தின் இணைச் செயலாளர் தல்லீன் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இத்திட்டத்தின்படி மகாராஷ்டிராவில் 2 நகரங்கள் உருவாக்கப்படும். ஹரியானா, உ.பி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் தலா ஒரு நகரம் உருவாக்கப்படும். இதற்காக ரூ. 17,500 கோடி செலவிடப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நகரங்கள் உருவாக்கப்படும்.
ஒவ்வொரு நகருக்கும் ரூ. 2500 கோடி செலவிடப்படும். இந்த புதிய நகரங்களில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உருவாக்கப்படும். அதி நவீன அடிப்படைக் கட்டமைப்புகள் இங்கு இடம் பெற்றிருக்கும்.
நாடு முழுவதும் அடுத்த 30 வருடங்களில் 24 நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் ஒரு பகுதியாக புதிய நகரங்கள் உருவாக்கப்படவுள்ளன.
புதிதாக உருவாக்கப்படும் நகரங்கள் அனைத்தும் டெல்லி-மும்பை தொழிற் பாதையில் அமையவுள்ளன.
2030ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 59 கோடி பேராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே நகரங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2030ம் ஆண்டில் இந்தியாவில் 68 மேம்படுத்தப்பட்ட நகரங்கள் இருக்கும். அந்த நகரங்களில் மொத்தமாக 10 கோடி பேர் வசிப்பார்கள்.
நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 70 சதவீதம் இந்த நகரங்களில் இருக்கும். நாட்டின் ஜிடிபியில் 70 சதவீதத்தை இந்த நகரங்களே பங்களிக்கும் என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications