தமிழகத்தில் பஸ் ஸ்டிரைக்-பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு, கல்வீச்சு

அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் வழங்க கோரி சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட 6 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை, வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 1.40 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில் சுமார் ரூ.2,500 முதல் ரூ.8,000 வரை அதிகம் கிடைக்கும் என அரசு அறிவித்தது.
ஆனால் இது ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக தொழிற்சங்கம், இடதுசாரி தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை அதிருப்தி தெரிவித்துள்ளன. இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கூறுகையில், இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. எனவே, அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் வழங்க கோரி பிரதான தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஏ.ஐ.டி.யூ.சி., தே.மு.தி.க. கட்சியின் தொழிற்சங்கம் உள்ளிட்ட 6 சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஜனவரி 26-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 27-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 6 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் ஸ்டிரைக் தொடங்கியது. 6 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவித்திருந்தபோதிலும் திமுகவின் தொமுச தொழிற்சங்கத்தினர் முழு வீச்சில் பஸ்களை ஓட்டுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்ததால் பஸ் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
இருப்பினும் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் டெப்போக்களில் உள்ள 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
25 இடங்களில் கல்வீச்சுச
ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமல் பஸ்களை ஓட்டியவர்கள் மீது சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். சென்னையில் திருவொற்றியூரில் 4, எண்ணூரில் 2, ஆவடியில் 4 பஸ்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேபோல கன்னியாகுமரி உள்பட தமிழகத்தில் 25 இடங்களில் பஸ்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் 2 பேரைப் பிடித்துள்ளனர்.
இந்த ஸ்டிரைக் குறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,
சட்ட விரோதமாக இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து பஸ்களும் இயக்கப்படும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் தலைவர்களை தவிர, மற்ற தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு வருவதாக கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வின் படி, ரூ.2,500 முதல் ரூ.8,000 வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும். சில தொழிலாளர்களுக்கு மின் ஊழியருக்கு இணையான சம்பளம் கிடைக்கும் என்றார்.
ஸ்டிரைக்கைத் தொடர்ந்து டெப்போக்கள் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பதட்டமான பகுதிகளில் பஸ்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லையில்...
நெல்லையில், வேலை நிறுத்தத்தால் பஸ்களை பாதிப்பின்றி இயக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகம் போராட்டத்தில் பஙகேற்கும் ஊழியர்களின் பட்டியலை ஏற்கனவே தயார் செய்துள்ளது.
அவர்களுக்கு பதிலாக சேமநல ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மூலம் அந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications