தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதல்- 9 ஐயப்ப பக்தர்கள் பலி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 9 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தண்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா.
இவரது மனைவி சின்னபாப்பா (52), இவர்களது மகன்கள் சீனிவாசலு (30), ராஜேந்திரன் (26), சுப்பிரமணி (39), கணேசன் (32), பேரன் ரவிதேஜா (12), மற்றும் உறவினர்கள் ரமேஷ் (28), மோகன் (25), சுரேஷ் (30), குமார் (21) ஆகியோர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருந்தனர்.
கடந்த 30-ம் தேதி இருமுடி கட்டி அனைவரும் குவாலிஸ் காரில் ஐயப்பன் கோவிலுக்கு சென்றனர்.
சாமியை தரிசித்துவிட்டு, பழனி சென்று முருகனை தரிசித்துவிட்டு சேலம் வழியாக தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சோதனைச் சாவடி அருகே கார் சென்று கொண்டிருக்கையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின் புறத்தில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் சின்னபாப்பா, சீனிவாசலு, ராஜேந்திரன், சுப்பிரமணி, ரமேஷ், மோகன், குமார், சுரேஷ் ஆகிய 8 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கணேசன், ரவிதேஜா ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ரவிதேஜா இறந்தான். கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications