செங்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் மரணம்
Subscribe to Oneindia Tamil

செங்கம் தனி தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து வந்த வரதன், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்றுகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எம்.ஏ. பி.எல். படித்துள்ள வரதன், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்க்கரிகாத்தூர் கிராமத்தில் பிறந்தவர். 3 முறை சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளர் பதவி வகித்தவர்.
தமிழக சட்டசபைக்குப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் செங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது.












Click it and Unblock the Notifications