சரியும் காங்கிரஸ், வளரும் ஆர்.எஸ்.எஸ்.-இந்து முன்னணி தலைவர் ராம.கோபலன் பேட்டி
திருச்சி: காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லாதாதல் தான் இமாலய ஊழல்கள் எல்லாம் நடைபெற்றுள்ளது என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து திருச்சியில் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அறநிலையத் துறையில் ஊழல் மலிந்து விட்டது. ஆயிரக்கணக்கான கோயில்களில் உள்ள உற்சவர் சிலைகள் சிறை வைக்கப்பட்டுகின்றன. மேலும் பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் செம்பு சிலைகளாக மாற்றம் செய்யப்படுகிறது. கோயில் நிலங்கள் விற்கப்படுகிறது.
இந்து கோயில்களில் தண்டனை போல கட்டணம் வசூல் செய்கின்றனர். இது போன்று கோயில்களில் அரசு மேற்கொள்ளும் அத்துமீறல்களை கண்டித்தும், கோயிலை விட்டு அரசை வெளியேற வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரங்கள், ஒன்றிய அளவில் இந்து முன்னணி சார்பில் வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
காங்கிரஸ் கட்சி இந்து இயக்கங்கள் மீது கடுமையான கருத்துக்களை கூறி வருகிறது. இதனால் அக்கட்சி பல சரிவுகளை சந்தித்து வருகிறது. மாறாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இந்துக்களை குறைகூறி பேசினால் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை பற்றி ஒவ்வொருவரின் வீட்டு கதவுகளையும் தட்டி எடுத்துக் கூறுவோம்.
காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லாதாதல் தான் இமாலய ஊழல்கள் எல்லாம் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்ற ஒரு ஆண்டுக்குள் 9 முறை பெட்ரோல் பொருட்களின் விலைகளை ஏற்றியுள்ளது. இதில் இருந்து காங்கிரஸ் ஆட்சியின் லட்சணம் மக்களுக்கு புரியும்.
இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருவது கண்டிக்கத்தக்கது. தரமற்ற பொருட்களை இந்தியாவுக்குள் அனுப்பி, நமது பொருளாதாரத்தை சீனா சீர்குலைக்க முயற்சிக்கிறது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications