சென்னையில் சோவுடன் பாஜக தலைவர் நிதின் கத்காரி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வந்த பாஜக தலைவர் நிதின் கத்காரி, சோ ராமசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் சமயத்தில் சோவிடம் ஆலோசனை கேட்பது சில குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் பழக்கம். சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை கூறினார் சோ.
இந்த நிலையில் சென்னை வந்திருந்த பாஜக தலைவர் நிதின் கத்காரி சோவை சந்தித்துப் பேசி ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டார். பாஜக சட்டசபைத் தேர்தலில் எப்படிப் போட்டியிட வேண்டும் என்பது குறித்து சோ ஆலோசனை கூறியதாக தெரிகிறது.
பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளுமாறும் சோ கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் பாஜகவை எந்த முன்னணி அரசியல் கட்சியும் கூட்டணிக்காக கூப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக கூட தற்போது பாஜகவை சீந்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications