சேலத்தில் 63 ரவுடிகள் திடீர் கைது - போலீசார் அதிரடி நவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சேலம் : சேலத்தில் 63 ரவுடிகளை திடீர் என போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலத்தில் ஆள் கடத்தல், தொழில் அதிபர்களுக்கு மிரட்டல், கொலை, கொள்ளை என பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. இது குறித்து காவல் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்த குவிந்தன. ஆயினும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வந்தனர்.
இந்நிலையில் பொறுமையாய் இருந்த போலீசார் ரவுடிகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த மூன்று நாட்களாக சேலத்தில் ரவுடிகளை விரட்டி விரட்டி கைது செய்தனர். சுமார் 63 ரவுடிகள் மற்றும் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications