பிரபல ரவுடி சந்திரன் கார் மரத்தில் மோதி பலி-சிதம்பரத்தில் ஆதரவாளர்கள் ரகளை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சந்திரன் விபத்தில் பலியானான்.

தர்மபுரி மாவட்டதைச் சேர்ந்தவன் சந்திரன். பிரபல ரவுடி. இவன் மீது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தீர்த்தமலையில் இருந்து கோட்டைப்பட்டிக்கு ரவுடி சந்திரன் காரில் சென்றுள்ளான். நல்ல போதையில் சென்றதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் சந்திரன் ஸ்பாட்டிலேயே இறந்தான்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திரனது உடலை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடந்த சில மாதங்களாக போலீசாருக்கு பயந்து கோட்டைப்பட்டியில் சந்திரன் தலைமறைவாக இருந்து வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,சந்திரனின் ஆதரவாளர்கள் சிதம்பரத்தில் அட்டகாசத்தில் இறங்கினர்.

சாலையில் சென்ற 5 பேருந்து மற்றும் ஒரு காரை அடித்து நொறுக்கினர். மேலும், அண்ணாமலை நகரில் வீடு வீடாக சென்று வீட்டில் தாக்குதலில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+