என்னிடம் ரூ.100 கோடி கேட்டு பிளாக்மெயில் செய்தனர்-நித்யானந்தா

பெங்களூர் பிடுதியில் உள்ள தனது ஆசிரமத்தில் நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
நான் யாரையும் மெஸ்மரிசம் செய்யவில்லை. இந்து பாரம்பரியத்தை அறிவியல்ரீதியாக பாதுகாக்கும் என்னை குற்றவாளியாக ஜோடிக்க முயற்சி்ப்பதன் மூலம் அந்தப் பாரம்பரியத்தையே கொச்சைப்படுத்த முயன்றனர். என் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரஞ்சிதாவை பாதிக்கப்பட்டவர் போல காட்ட முயற்சித்தனர். பின்னர் கோபிகாவை பாதிக்கப்பட்டவர் போல காட்ட முயற்சி நடந்தது.
யாரும் புகார் தராமலேயே, பாதிக்கப்பட்டவர் என்று யாரும் குற்றம் சாட்டமேலேயே என் மீது வழக்குத் தொடரப்பட்டது விந்தையானது, ஆச்சரியமானது.
என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்ளும் பொய்யானவை. எனக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த யாராலும் பாதிப்பு வந்ததே இல்லை. அதற்காக கர்நாடக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பொய்யான வீடியோவை உருவாக்கி என்னை சிலர் பிளாக்மெயில் செய்து வருகின்றனர். என்னிடம் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டினர். இதை கர்நாடக சி.ஓ.டி. போலீசாரிடம் நான் தெரிவித்தேன். அவர்கள் எனக்காக வருத்தப்பட்டார்களே தவிர,எந்க நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிலர் எனது பக்தர்களை மிரட்டி பணம் பறித்தனர். எனக்கு உலகம் முழுவதும் 1 கோடி பக்தர்கள் உள்ளனர். சில பவர்புல் மனிதர்களால் எனது உயிருக்கு ஆபத்து நிலவுகிறது. எனக்கு எதிராக திட்டமிட்ட சதி தீட்டப்பட்டுள்ளது.
நான் இந்துவாக இருந்தாலும், நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் காரணமாக நான் இந்து மதத்திலேயே சிறுபான்மையின பிரிவைச் சேர்ந்தவன்.
நான் கைது செய்யப்பட்டதே சட்ட விரோதமானது. இமாச்சலப் பிரதேசத்தில் எனக்கு பெரும் ஆபத்து நிலவியது. பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் சில சமூக விரோதிகள் என்னை தாக்க முயன்றனர். போலீசார் எனக்கு நோட்டீசே தராமல் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.
என்னைச் சுற்றி 1,200 பக்தர்கள் வசித்து வருகின்றனர். எனது ஆசிரமத்தில் கர்நாடக சி.ஓ.டி. போலீசார் நடத்திய ரெய்டின்போது எந்த ஆபாச வீடியோவோ, படமோ கைப்பற்றபடவில்லை. அவர்கள் மதம் சார்பான சில புத்தகங்களைத் தான் எடுத்துச் சென்றனர்.
எனது பக்தர்களை புண்படுத்துவதற்காக் வீடியோவை டிவிக்களில் லீக் செய்தது சி.ஓ.டி. போலீசார் தான். உலகிலேயே யு டியூப் வீடியோவில் மிக அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட குரு நான் தான்.
எனது பாஸ்போர்ட்டை முடக்கினர், வங்கிக் கணக்குகளை முடக்கி நான் உடனடியாக சட்டரீதியிலான உதவி பெற முடியாமல் செய்தனர்.
எனக்கு எதிரான இந்த மதரீதியான ஒடுக்குமுறை நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் நான் பாதயாத்திரை போராட்டத்தில் ஈடுபடுவேன். எனது பக்தர்கள் ரத்தத்தால் தங்களது கைரேகைளை பதிவு செய்து அனுப்புவார்கள். இந்த சட்ட விரோத நடவடிக்கையை கண்டித்து 21 நாள் இயக்கம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications