புதுக் கட்சி தொடங்குகிறார் கே.பி.-கோத்தபயாவுடன் சந்திப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்து, இப்போது ராஜபக்சே சகோதரர்களின் நிழலில் அண்டிப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கே.பி என்கிற குமரன் பத்மநாதன் விரைவில் புதுக் கட்சி தொடங்கப் போகிறாராம்.
யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து அவர் கட்சி நடத்தப் போகிறாராம். இந்தக் கட்சி நடுநிலைப் போக்கைக் கடைப்பிடிக்கும் என்று கூறப்படுவதுதான் செம வேடிக்கையான செய்தி.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கேபி வட பகுதிக்குப் போயிருந்தார். அப்போது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பிரதிநிதிகள் சிலரை சந்தித்துப் பேசினாராம். அப்போதுதான் புதுக் கட்சி தொடர்பாக விவாதித்து முடிவெடுத்தாராம்.
இந்த நிலையில் நேற்று கோத்தபயா ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசியுள்ளார் கேபி. வட மாகாண நிலவரம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தார்களாம்.
மேலும் இந்த சந்திப்பின்போது 3 கோரிக்கைகளை கேபி வைத்தாராம். அதை கோத்தபயா ஏற்றுக் கொண்டாராம்.












Click it and Unblock the Notifications