ரயில் கூரையில் பயணித்த 10 பேர் பலி, பலர் படுகாயம்-ரயிலுக்கு தீ வைப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரயில் கூரையில் பயணம் செய்த ஏராளமான இளைஞர்களில் 10 பேர் பலியானார்கள். மேலும், பலர் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நேற்று காலையில் இந்தோ-திபெத் போலீஸ் படைக்கு ஆள் சேர்ப்பு நடந்தது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் ஹவுரா சென்ற மகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தங்கள் ஊர்களுக்கு திரும்பினர். அவர்கள் அனைவருக்கும் ரயிலில் இடம் இல்லை. அதனால் நூற்றுக்கணக்கானவர்கள் எப்படியும் ஊர் திரும்பினால் போதும் என்று நினைத்து ரயிலின் கூரையில் அமர்ந்து பயணித்தனர்.
கூரை நிறைய ஆட்களுடன் ரயில் ஷாஜகான்பூர் மாவட்டம் ரோஜா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கையில் பாதைக்கு மேல் சென்ற மின்சார வயரில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் 10 இளைஞர்கள் கீழே தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
ரயில் கூரை மேல் இருந்த மேலும் பலர் மேம்பாலம் இடித்தும், மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியாலும் ரயிலை விட்டு கீழே குதித்தனர். இதனாலும் பலர் உயிர் இழந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் 15 பேருக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த மற்ற இளைஞர்கள் ரயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications