புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணியுடன் அதிமுக 'சீட்' பேச்சு
சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக புதிய தமிழகம் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகளுடன் அதிமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியது அதிமுக.
இந்த நிலையில் நேற்று புதிய தமிழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது.
அதிமுக சார்பில் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும், புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, அய்யர், பாஸ்கர் மதுரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டசபைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. குழுவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்றது. இனி அடுத்தடுத்து பேச இருக்கிறோம். தமிழகம் முழுவதும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார் அவர்.
இதேபோல மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் சேதுராமன், இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசி தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications