திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பாமக இல்லையென ஒருபோதும் கூறவில்லை: ராமதாஸ்

கூட்டணி குறித்து பந்தா காட்டியதன் விளைவாக தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பாமக. இதனால் அதற்கு அதிமுக கூட்டணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்திருந்தாலும், அங்கும் கூடுதல் சீட் கேட்டு நெருக்குதல் கொடுத்தால் அதிமுகவும் கைவிடும் அபாயம் இருப்பதால், பெரும் சிக்கலில் தானாக போய் சிக்கியுள்ளது பாமக.
இந் நிலையில் டாக்டர் ராமதாஸ் இடைப்பாடி தொகுதியில் சுற்றுப் பயணம் செல்லும் வழியில் இன்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:
கேள்வி: திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமக இருக்கிறது என்று டெல்லியில் முதல்வர் கருணாநிதி நம்பிக்கையுடன் தெரிவித்தாரே.அது நிறைவேற வாய்ப்புள்ளதா?
பதில்: திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. என்றாலும், தற்போது இது குறித்து சொல்லும் நிலையில் நான் இல்லை. வெகு விரைவில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். முதல்வரின் நம்பிக்கை வீண்போகாது என்றார்.
முன்னதாக ஈரோடு மாவட்டம் பவானியில், சட்டசபைத் தொகுதி கிளை தலைவர்கள் உள்ளிட்டநிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. யாருடன் கூட்டணி என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
இன்னும் ஒரு வாரத்தில் சாதகமான கூட்டணி அமையும். அது தொடர்பான முடிவை நான் எடுப்பேன். பா.ம.க. இருக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி. பா.ம.க. இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
5 நடிகர்களின் பதவிக் கனவைத் தகர்ப்போம்:
ஐந்து நடிகர்கள் (விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், சீமான், டி.ராஜேந்தர்) இப்போது சென்னையிலிருந்தபடி கட்சி ஆரம்பித்து பதவியைப் பிடிக்க துடித்து வருகிறார்கள். இவர்களை நோக்கி சென்றவர்களை நம்முடைய கட்சியில் சேர்க்க வேண்டியது ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்களிடம் உள்ளது. கட்சியில் சேரும் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். இதற்காக கூடுதல் பொறுப்புகளை உருவாக்க வேண்டும்.
பா.ம.க.வில் கிளைக்கழகத்தில் செயலாளர் பதவியில் இருப்பவர்கள் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி பணியில் அவர்கள் வேகமாக செயல்படுவார்கள். இவர்கள் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications