பாக். அதிபர் ரகசிய திருமணம்-ஜர்தாரி மறுப்பு, ஜமானி மலுப்பு
வாஷிங்டன்: கிஸ்தான் அதிபர் ஜர்தாரியும், மருத்துவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி பிரமுகருமான தன்வீர் ஜமானியும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் ஏராளமான தகவல்கள் வருகின்றன.
ஜமானி சிந்தி மருத்துவக் கல்லூரியில் படித்தார். இதையடுத்து அயர்லாந்தில் அரசியல் படிப்பில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றார். தற்போது அமெரிக்காவில் மருத்துவராக உள்ளார். அவர் நியூ யார்க், மான்ஹாட்டனில் உள்ள கிராமெர்சி பார்க்கில் வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அவருக்கு லண்டன், துபாய், இஸ்லாமாபாத் மற்றும் மான்ஹாட்டனில் எஸ்டேட்கள் இருப்பதாக ஏராளாமான இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜர்தாரி ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது ஆதாரமற்ற வதந்தி என்று அதிபர் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் ஜமானியிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் மலுப்பிவிட்டார்.
அதிபர் ஜர்தாரிக்கு எதிராக வதந்தியை பரபரப்புவதை வன்மையாக கண்டிப்பதாக ஜர்தாரியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானியும் இந்த தகவலை மறுத்துள்ளார்.
இது குறித்து ஜமானியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது,
உங்களைப் பற்றி இணையதளத்தில் நிறைய செய்திகள் வருகின்றன. அதை நீங்கள் உறுதிபடுத்தவோ அல்லது மறுக்கவோ விரும்புகிறீர்களா?
ஜமானி : நான் இது குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. நான் சட்ட ரீதியான அறிவுரை பெற்றுள்ளேன்.
இது உங்கள் சொந்த விஷயம். இதற்கு எதற்கு சட்ட அறிவுரை?
ஜமானி : நான் சொந்த விஷயங்களுக்கு மிகக் குறைவாகத் தான் முக்கியத்துவம் கொடுப்போன். நாங்கள் எகிப்து நிலைமை பாகிஸ்தானின் விலை உயர்வு, பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக பிலாவலை ஆக்குவது உள்ளிட்ட மற்ற விஷயங்களைப் பார்க்க வேண்டும். அதனால் சொந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் குறைவு தான்.
நீங்கள் திருமதி ஜர்தாரியா?
ஜமானி : நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை.
அதிபரின் செய்தித்தொடர்பாளரான பர்ஹதுல்லா பாபர் இந்த வதந்திகளை யாரோ சுயஅறிவு இல்லாதவர்கள் தான் கற்பனையாக க் கூறியுள்ளனர் என்றார். ஆனால் ஜமானியின் பதில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications