அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமா?: விண்ணப்பம் விலை ரூ.10,000!
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும்.
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை, உரிய கட்டண தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். வரும் 18ம் தேதி பிற்பகல் 2 மணி வரை விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
கட்டணம் ரூ.10,000:
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் அ.தி.மு.க. கட்சியினர், தலைமை கழகத்தால் வழங்கப்படும் உரிய விண்ணப்பப் படிவங்களை மட்டுமே பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10,000மும், புதுச்சேரியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.5,000மும், கேரளத்தில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ. 1,000மும் கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications