ஆட்சி மாறுதல் குறித்து முபாரக் நல்ல முடிவு எடுப்பார் : ஒபாமா நம்பிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா எகிப்து அதிபரைத் தொடர்பு கொண்டு நாட்டில் நடக்கும் போராட்டத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் அமைதிக்கும், ஜனநாயகத்திற்கும் வழி வகுக்கும் வகையில் பதவி விலக வலியுறுத்தியுள்ளார். முபாரக் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று ஒபாமா நம்புகிறார்.
இது குறி்த்து ஒபாமா கூறியதாவது,
அதிபர் முபாரக் நாட்டின் மீது அக்கறை உள்ளவர். அவர் ஒரு தேசபக்தர். ஆட்சியில் உள்ளவர்களையும், நாட்டு மக்களின் கூக்குரலையும் கேட்டு அவர் ஆட்சி மாறுதல் குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
எகிப்தின் எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்றால் ஆட்சி மாறுதல் ஏற்பட வேண்டும். ஜனநாயக முறை கொண்டு வர வேண்டும், நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடக்க வேண்டும், மக்கள் குறை கேட்கும் பிரதிநிதிகள் அரசு மலர வேண்டும்.
அடுத்த தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று முபாரக்கே அறிவித்திருக்கிறார். மறுபடியும் பழை முறைகளுக்கே திரும்புவது ஒத்து வராது. அடக்குமுறை ஒத்து வராது. வன்முறையில் ஈடுபடுவதும் வேலைக்கு ஆகாது.
ஆட்சி மாறுதல் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது என்று நினைக்கிறேன் என்றார்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் அஹமது அபௌல் கெய்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் துணை அதிபர் உமர் சுலைமானும், தலைமை ராணுவ அதிகாரிகளுடன் நாட்டின் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். வரும் செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடக்கும்வரை முபாரக்கின் அதிகாரங்களை தற்காலிகமாக சுலைமானுக்கு கொடுக்க முடியுமா என்று ஆலோசனை நடந்து வருகிறது. அதன் மூலம் முபாரக் பெயருக்கு மட்டும் தான் அதிபராக இருக்கக்கூடும். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும், மக்களும் பிடிவாதமாக இருப்பதாலும் இந்த ஆலோசனை நடந்து வருகிறது என்று வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications