வள்ளியூரில் கட்டப்பஞ்சாயத்து பார்ட்டிகளுக்கு வலை! - நெல்லை எஸ்.பி. அதிரடி
வள்ளியூர்: நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரியின் நேரடி பார்வையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் வள்ளியூரில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டி வருகின்றனர். இது தவிர ரவுடிகள் பட்டியலும் தயாரிக்கப்படுவதால் பெரும்புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கட்டப்பஞ்சாயத்து, நிலமோசடி, கந்து வட்டி கொடுமை, சட்டம் ஒழுங்கு சீர்குலைப்பு, பெண்களிடம் செயின் பறிப்பு, தொடர் கொள்ளை போன்றவற்றை சமூக விரோதிகள் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி வள்ளியூரில் முகாமிட்டு விசாரணை நடத்தினார். விசாரணையில் வள்ளியூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதை அறிந்து நேற்று இரவு முதல் ஆயுதப்படை, சிறப்பு படை, போக்குவரத்து போலீசார் உட்பட சுமார் 75க்கும் அதிகமான போலீசாரை வள்ளியூரில் ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள காமராஜர் நகர், அம்பேத்கார் நகர், ராதாபுரம் ரோடு, முருகன் கோவில்பாதை, கோட்டையடி விலக்கு, புறநகர் பகுதியான இபி காலனி, நல்லசமாரிடன் நகர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தலா 4 போலீசார் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications