நாடாளுமன்றத் தொகுதிக்கு தலா ஒரு தொகுதி-அதிமுகவிடம் 39 தொகுதிகள் கேட்கும் மதிமுக

அதிமுக, மதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினர் நேற்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை, நேற்று மாலை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில், மதிமுக திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் க.சோமு, தலைமை நிலையச் செயலாளர் குருநாதன் ஆகியோருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடித்து வெளியே வந்த மதிமுக திருப்பூர் மாவட்ட செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,
அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவுடன், ம.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவினராகிய நாங்கள் தொகுதிப் பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். தேர்தல் வியூகம் வகுப்பது, தேர்தல் பணி, தேர்தல் அறிக்கை ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். எத்தனை தொகுதிகள், எந்தந்த தொகுதிகள் என்பது பற்றி கட்சித் தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும்.
வைகோ போட்டியிடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது. இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் சேர இருக்கின்றன. எனவே அடுத்த கட்ட பேச்சு வார்த்தையும் நடக்கவுள்ளது என்றார்.
இந்தச் சந்திப்பின்போது அதிமுகவிடம் மதிமுக 39 தொகுதிகள் கேட்டதாகத் தெரிகிறது.
நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டசபைத் தொகுதி என்ற அடிப்படையில் 39 தொகுதிகளை கோரிய மதிமுக, தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 39 தொகுதிகளின் பட்டியலையும் அதிமுகவிடம் ஒப்படைத்தது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications