சோனியாவை சந்திக்கிறார் சிரஞ்சீவி, காங்கிரஸில் இணைகிறது சிரஞ்சீவி கட்சி, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம

காங்கிரஸ் கட்சியுடன் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை சிரஞ்சீவி இணைக்க முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இன்று சோனியாவை சந்தித்துப் பேசவுள்ளார் சிரஞ்சீவி.
தெலுங்கானா விவகாரம், ஜெகன் மோகன் ரெட்டியின் பிரிவு ஆகியவற்றால் ஆந்திராவில் தற்போது காங்கிரஸ் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து சிரஞ்சீவியை தனது கட்சியுடன் வந்து இணையுமாறு காங்கிரஸ் தரப்பிலிருந்து பேச்சு நடத்தப்பட்டது சிரஞ்சீவியும் தனித்துக் கட்சி நடத்த முடியாமல் திணறி வருகிறார். இதையடுத்து காங்கிரஸுடன் இணைய அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த பின்னணியில் இன்று சோனியா, சிரஞ்சீவி சந்திப்பு நடைபெறுகிறது. இதில் இறுதி முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது. சிரஞ்சீவி கட்சி காங்கிரஸில் இணைந்தால், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சோனியாவை சந்திப்பதற்காக டெல்லி வந்துள்ளார் சிரஞ்சீவி. இதுகுறித்து அவர் கூறுகையில், சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் நான் டெல்லி வந்துள்ளேன். அவரை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசவுள்ளேன் என்றார்.
சோனியாவிடம் என்ன பேசப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, முதலில் அவர் என்னிடம் என்னை திட்டத்தை வைக்கப் போகிறார் என்று பார்க்க வேண்டும். அதன் பிறகு நான் முடிவெடுக்க முடியும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் ஐக்கிய ஆந்திரா என்ற எங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றார் சிரஞ்சீவி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications