என்னை அரசியலில் சேர்த்ததும் ஜெ.தான், அதிமுகவிலிருந்து அனுப்பியதும் அவர்தான்-எஸ்.வி.சேகர்
சென்னை: என்னை அரசியலில் அறிமுகப்படுத்தி வைத்தவர் ஜெயலலிதாதான். ஆனால் அவர்தான் என்னை அதிமுகவிலிருந்தும் அனுப்பி வைத்தார் என்று கூறியுள்ளார் அங்கும் இங்குமாக அலைபாய்ந்து இன்று காங்கிரஸில் போய்ச் சேர்ந்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர்.
அதிமுக எம்.எல்.ஏவாக மயிலாப்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.வி.சேகர். பின்னர் ஜெயலலிதாவுடன் பிணக்கு ஏற்படவே அவரை கட்சியிலிருந்து விரட்டியடித்தார் ஜெயலலிதா. இருந்தாலும் தனது எம்.எல்.ஏ பதவியை சற்றும் கைவிடாமல் தொடர்ந்து இறுகப் பற்றிக் கொண்டு நடை போட்டுக் கொண்டிருக்கும் சேகர், ஆரம்பத்தில் திமுகவுடன் நெருக்கமாக இருந்தார். பின்னர் திடீரென ராகுல் காந்தியை சந்தித்தார். இன்று காங்கிரஸில் வந்து சேர்ந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி பவனில், இன்று நடந்த நிகழ்ச்சியில் தங்கபாலு, ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், வசந்தகுமார், குமரி அனந்தன் ஆகிய கோஷ்டித் தலைவர்கள் முன்னிலையில் அவர் இணைந்தார். ஜி.கே.வாசன் முன்னிலையில் அவர் இணைந்ததால் அவர் வாசன் கோஷ்டியில் இணைந்திருப்பதாக கருதப்படுகிறது.
பின்னர் சேகர் பேசுகையில், இந்தியாவின் மிகப் பெரிய கட்சியாக காங்கிரஸ் திகழ்வதாகவும் அரசியல் நாகரீகமும் பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் உள்ள கட்சியாகவும் காங்கிரஸ் திகழ்கிறது.
அரசியலுக்கு என்னை அறிமுகப்படுத்தியவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தவரும் அவர்தான் என்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தார் சேகர். அப்போது சீட்டுக்காக கட்சியில் சேர்ந்துள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தலில் போட்டியிட நான் சீட் எதுவும் கேட்கவில்லை என்றார்.
நீங்கள் காங்கிரஸில் இணையும் முடிவு குறித்து கருணாநிதி, மு.க.ஸ்டாலினிடம் பேசினீர்களா என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியில் இணையும் என்னுடைய முடிவு குறித்து முதல்வரை, துணை முதல்வரையும் சந்தித்து தெரிவித்தேன். அவர்கள் என்னை வாழ்த்தினார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications