பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் போராட்டம்
சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்கள் பசும்பாலுக்கு ரூ. 5-ம், எருமைப் பாலுக்கு ரூ. 5-ம் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், பால் சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பின் முழு அளவு நாளை தான் தெரிய வரும். இதற்கிடையே பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது விவசாயிகள் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications