திருப்பூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் அதிரடி மாற்றம் - மாவட்ட கலெக்டர் சத்தியமூர்த்தி உத்தரவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் சத்தியமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் வருவதையொட்டி அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது திருப்பூர் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தாசில்தார்கள் இடமாற்றம் விவரம் வருமாறு,
திருப்பூர் தனி தாசில்தார் (முத்திரைகள்) சந்தியா திருப்பூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் கோட்ட கலால் அதிகாரி சின்னச்சாமி மடத்துக்குளம் தாசில்தாராக பணியாற்றுவார்.
மடத்துக்குளம் தாசில்தார் லியாகத் அலி அவினாசி சமூக நல பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் குடிமைப்பொருள் தனி தாசில்தார் நல்லசாமி உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உடுமலை பாதுகாப்பு திட்ட தாசில்தார் சைபுதீன் திருப்பூர் குடிமைப்பொருள் தனி தாசில்தாராகவும், காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அன்பு காங்கயம் ஆதி திராவிடர் நல தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
காங்கேயம் ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் தேவமனோகரன் திருப்பூர் சமூக நல பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் தங்களுக்கான புதிய பொறுப்பை உடனே ஏற்றுக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications