எம்பிபிஎஸ் சேர்க்கை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் நுழைவுத் தேர்வு இல்லை-அரசு உறுதி
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என்று சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்போவதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மத்திய அரசு இது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது.
இந் நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இடைக்கால பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தின் மீது பேசிய அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டம் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை. இதில், தமிழக அரசின் நிலை என்ன என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, நிச்சயமாக தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வராது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில்சிபலும் உறுதி அளித்திருக்கிறார். மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். அதனால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு இருக்காது என்றார்.
மீண்டும் சி.வி.சண்முகம் பேசுகையில், மத்திய அரசின் நுழைவுத் தேர்வு தொடர்பான சட்டத்தை திரும்பப் பெற ஏன் தமிழக அரசு வற்புறுத்தவில்லை? என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், நுழைவுத் தேர்வு தொடர்பாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ற முறையில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் நான் கலந்து கொண்டேன். மாநில அரசை கலந்து பேசாமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் உறுதி அளித்துள்ளார். நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே ஓட்டுக்காக, தேர்தலுக்காக சி.வி.சண்முகம் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம்.
தவறாகப் பேசாமல் நிதானமாகப் பேசுங்கள். பென்னாகரம் தொகுதியில் டெபாசிட் இழந்தவர்கள் (அதிமுக) இப்போது ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications